இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற அதிரடி படங்களை இயக்கி, விமர்சன ரீதியாக பெரும் வெற்றியடைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், கூலி படத்தில் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளது.
இதுகுறித்து கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘ஒரு வீடியோவால் 2 மாதங்களாக பலர் உழைத்த உழைப்பு வீணாக போய் உள்ளது. இதுபோன்ற எந்த செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம். இது படத்தை பார்க்கும்போது அதன் அனுபவத்தை கெடுத்துவிடும்’ என்று பதிவிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.