தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். சட்ட ரீதியாக விவாகரத்து பெறவேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக் செய்து வருகிறார். மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவிற்கு தனுஷ் லைக் செய்தது பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை.
ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓணம் ஸ்பெஷல் என குறிப்பிட்டு தன்னுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்திருந்தார். அதையும் தனுஷ் லைக் செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்களா என கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு ஆகவுள்ளது என்பதால், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்தால் அது ரஜினிகாந்திற்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை தரும் என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இவர்களின் முடிவு என்னவென்று.