தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை பொதுக்கூட்டம் இன்று (16) மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், மூத்த போராளி மு.மனோகரன், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சங்கு சின்னதுக்கு ஆதரவாக உரைகளை ஆற்றியிருந்தனர்