நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.