என் வாக்கு என் உரிமை..நான் வாக்களிப்பேன்..!

பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதற்காகவே வாக்களிக்கும் நபர்களாக இருந்து வருகின்றனர்.

தனது ஒரு வாக்கு நாட்டின் தலைவரையும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய பெருமதி மிக்க வாக்கு என்பதனையும் சிந்திப்பதில்லை.
இதன் காரணமாகவே மக்கள் வாக்களிப்பதில் முன்வருவதில்லை.

இதனை கருத்தில் கொண்டு பெருந்தோட்ட கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் பிரிடோ மக்கள் மத்தியில் வாக்களிக்கும். உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். நோக்கில்

வீதி நாடகங்களை பெருந்தோட்ட பகுதியில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் முன்னெடுத்து. வருகின்றது.
அந்த வகையில் மஸ்கெலியா அப்கட் பொகவந்தலாவ அக்கரப்பத்தனை தலவாக்கலை நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள தோட்டங்களில் வாழும் மக்களுக்கு இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவிக்கையில்.

இம்முறை நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிக பணத்தை செலவு செய்கின்றார்கள் இந்த பணம் இருந்தால் இரண்டு வருடம் அனைவரும் உண்ண முடியும். அவ்வளவு தொகை பணம் தேர்தலுக்காக செலவிட செயல்படுகிறது.

அந்த அளவுக்கு தேர்தல் என்பது மிக முக்கியம் என்பதற்காகவே இவ்வளவு பணம் செலவு செய்கின்றனர். வாக்காளர்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நபரும் தனக்கு வாக்குரிமை இருக்கின்றது

என்பதனை உணர்ந்து நாட்டின் நல்ல ஒரு தலைவரை தெரிவு செய்வதற்கு இந்த வாக்கினை பயன்படுத்துவது மிக முக்கியமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்கில் தான் இந்த நாட்டில் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முதியோர்கள் விசேட தேவை உடையவர்கள் வெளி மாவட்டங்களில் தொழில் செய்யும் சகோதரர்கள். நோயினால் பீடிக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரையும் வாக்களிப்பதை உறுதி செய்வதற்கு அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்தோடு நாம் வாக்களித்துவிட்டு இருக்காமல் எமது உரிமைகள் தொடர்பான விடயங்களை அரசியல் தலைவர்களிடம் முன்வைத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவது மிக முக்கியமாகும். .

சலுகைகளுக்காக வாக்களிக்காமல் உரிமைக்காக வாக்களிப்பதன். ஊடாகவே எமது இருப்பையும் காணி உரிமை வீட்டு உரிமையை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு இது தொடர்பாக நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை கருத்தில் கொண்டுதான் எமது நிறுவனம் தற்போது மக்கள் மத்தியில் வாக்கு உரிமை என்பது தொடர்பான அறிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு மனிதனின் வாக்குரிமை எவ்வளவு முக்கியம் என்பதனை உணரும் வகையில் இந்த வீதி நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

இதற்கு தோட்ட நிர்வாகங்கள் போலீஸ் நிலையங்கள் அரச ஊழியர்கள் என பலரும் முழு பங்களிப்பை இதற்கு வழங்கி வருகின்றார்கள்.

எனவே எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள வாக்கின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இத்திட்டம் மிக முக்கியமாக அமைகின்றன இத்திட்டத்தை சரியாக முன்னெடுக்க எமக்கு உதவிகளை செய்து வரும் அனைவருக்கும். தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.