பிரபல நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மலைகா அரோரா, இவரது தந்தை அனில் அரோரா இன்று (11) காலை 9 மணியளவில் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முழு விபரம், பொலிஸ் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது?
மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பாந்த்ரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார். இன்று காலை 9 மணி அளவில் இவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, மும்பை பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.