தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக இதய சத்திர சிகிச்சைகளுக்காக பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள். இலவச சுகாதார சேவை இருக்கின்ற போது அதற்கு சரியான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி இந்த இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தி வைத்தியசாலைக் கட்டமைப்பை பலப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டில் இந்த அளவு சிக்கல்கள் இருக்கின்ற போது ரணிலும் அநுரவும் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றனர். இது நீண்ட காலமாக வந்திருக்கின்ற தொடர்பாகும். நாட்டில் ஒரு மாற்றத்தை இதன் ஊடாக எதிர்பார்க்க முடியாது. ரணிலுக்கும் அநுரவிற்கும் இதில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. 220 இலட்சம் மக்களுக்காக இவர்கள் டீல் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்காகவே அவர்கள் டீல் செய்து கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி காலி பத்தேகம நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்போம் என்று கூறிய அனுர நல்லாட்சி காலத்தில் ஊழல் ஒழிப்பு குழுவின் தலைவராக இருந்த போது அவர் செய்தது எதுவும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு திருடர்களை பிடித்த ஒரே குழு ஐக்கிய மக்கள் சக்தியாகும். ராஜபக்சக்கள் நாட்டை வங்குரோத்தடையச் செய்தார்கள் என்ற தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணி எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கையாலேயே நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ரணில் அநுர நாட்டின் எதிர்காலம் அல்ல.
தற்போதைய ஜனாதிபதி இந்த தேர்தலில் தோல்வி அடைவார் என்பதை ஏற்றுக் கொண்டு உள்ளார். அநுரவை வெற்றி பெறச் செய்வதே அவரது விருப்பமாக இருக்கின்றது. இந்தச் ஜோடி நாட்டின் எதிர்காலம் அல்ல. எனவே இந்த ஜோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
ரணிலுக்கு நாட்டை வங்குரோத்தடையச் செய்யவே தெரியும்.
நாட்டின் வங்குரோத்து நிலைமையால் பொருளாதாரம் சுருக்கப்பட்டமையால், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வர்த்தகங்கள் 2 இலட்சத்து 60 ஆயிரம் மூடப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கானோருக்கான தொழில் வாய்ப்பு இன்மை அதிகரித்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. நாட்டில் அபிவிருத்தி இடம்பெறவில்லை. பொருளாதாரத்தை சுருக்குவதால் இந்த பிரச்சினையில் இருந்து மீட்சி பெற முடியும் என அரசாங்கம் கூறினாலும் அது பிழையான கருத்தாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தனியார் துறை தொழில் முனைவோருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு அரச தலையீடுகளை அதிகரித்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்றது. அதற்காக ஒரு மில்லியன் இளம் முறையினரை தொழில் முனைவோர்களை உருவாக்குவோம். இதன் ஊடாக பொருளாதார பலப்படுத்தப்படும். அத்தோடு வாழ்வாதாரமும் வலுப்பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அநுரவிடமும் ரணிலிடமும் வறுமையைப் போக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை.
தற்பொழுது நாட்டில் வறுமையால் பிடிக்கப்பட்டோர் இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளனர். ரணிலிடமும் அநுரவிடமும் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை. இவர்கள் தொடர்ந்தும் நிவாரணங்களை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வறுமையிலிருந்து மீட்சி பெறவே விரும்புகின்றனர். எனவே ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு வருடங்களுக்குள் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதோடு, இது வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேயிலை உற்பத்திக்காக விசேட ஜனாதிபதி செயலணி.
சிறு தோட்ட தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தேயிலை உற்பத்தி செய்யும் காணிகளில் 40 விதமான உரிமம் இருந்தாலும், அவர்கள் மொத்த தேசிய தேயிலை உற்பத்தியில் 70 விதமான பங்களிப்பையே வழங்குகின்றார்கள். இந்த நிலையில் தேயிலை உற்பத்தியை பாதுகாப்போம். அவர்களை வலுப்படுத்தும் வகையில் 50 கிலோ கிராம் உரம்மூடையொன்றை 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு, தேயிலை மீள் நடுகை செயற்த்திட்டத்திற்கு அரசாங்கம் தலையீடு செய்து உதவிகளை வழங்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேயிலைக்கான நிர்ணய விலைக்கு அரசாங்கத்தின் தலையீடு இல்லாவிட்டாலும் தேயிலை தொழில்துறையை பலப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவோம். தேயிலை தொழிற்சாலைகளின் தரப்படுத்தலுக்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையை ஆய்வு செய்வோம். இந்த தொழில்துறையின் பொன்னான யுகத்தை உருவாக்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கண்கட்டி வித்தை செயற்பாடுகள் இல்லாமல் நாட்டில் உள்ள கருவா உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடையச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.