சின்னசேலம் அருகே நடிகர் ஜீவாவின் கார் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவரது மனைவியும் உயிர்த்தப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ளது அம்மையகரம் கிராமம். இன்று சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான சொகுசு காரில் சென்றனர்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மைகரம் கிராமத்தின் அருகே வந்தபோது வீதியின் குறுக்கே நபர் ஒருவர் வந்ததாகவும் அவர் மீது மோதாமல் இருக்க நடிகர் ஜீவா காரை திருப்பிபோது, வீதியின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி சொகுசு காரானது தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் பொலிஸார் காரை மீட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.