இலங்கை வர்த்தக நாம தலைமைத்துவ விருது விழாவில், இலங்கையின் சிறந்த நாமத்திற்கான விருதை , எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றுக்கொண்டது. உலக சந்தைப்படுத்தல் காங்கிரஸ், சி .எம் .ஓ குளோபல் மற்றும் உலக சந்தைப்படுத்தல் நிபுணர்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் வழங்கப்பட்ட இந்த உயரிய விருதினை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன் பெற்றுக்கொண்டார். நிறுவனங்களின் மிகச்சிறந்த வணிகக் குறியீடு மற்றும் சந்தைப்படுத்தலை அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவிப்பதே இவ்விருதின் நோக்கமாகும்.