இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார்.
தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை தற்போது முன்னணி இயக்குனர்களாக மாற்றிய தயாரிப்பு நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி.
ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி பேனரில் படம் வெளியானாலே நிச்சயம் புதுமையாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணும் அளவிற்கு, பல வித்தியாசமான படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், டில்லி பாபு (50) கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்படுத்து தீவிர சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (9) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் இந்த திடீர் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.