தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து கொண்டு இருக்கிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகர் ஜெயம் ரவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் டிக் டிக் டிக் படத்தில் தனது தந்தை ஜெயம் ரவி உடன் இணைந்து நடித்திருப்பார்.
இந்த நிலையில், ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இதுகுறித்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உறுதியாக அறிவித்துள்ளனர்.