நுவரெலியா – ஹாவாஎலிய ஸ்ரீநகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி இன்று (08) பக்திபூர்வமாக ஆரம்பமானது.
சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று, அலங்கார தீபஆராதனை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ கருமாரியம்மன்,சோமாஸ்கந்த மூர்த்தி, சண்டேஸ்வரர் ஆகிய ஐந்து தெய்வங்களின் வெளி வீதியூடாக தேரேறி நகர் வலம் ஆரம்பமானது.
இதில் பல பகுதியில் வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் மேலும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .