எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் காலங்களிலும் தான் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு வேட்பாளர்களுக்கு தான் ஆதரவளிப்பதாக சில ஊடகங்களில் வௌியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.