மலேசியா நாட்டின் 67வது தேசிய தினம் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள Galle face ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இலங்கைக்கான மலேசிய நாட்டின் தூதுவர் பேட்லி ஹிஷாம் அடம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேசிய தின நிகழ்வின் விஷேட அதிதியாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை அரசின் சார்பில் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள், ஏனைய நாட்டின் தூதுவர்கள் மற்றும் ராஜ தந்திரிகள் பலரும் கலந்துக்கொண்டார்கள்.