வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் துரையப்பா விளையாட்ட அரங்கில் இடம்பெற்றது.
இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 13 கல்வி வலயங்களைச் சார்ந்த 1200 பாடசாலைகள் பங்கு பற்றியிருந்தன.
இதில் மன்னார் கல்வி வலயம் மூன்றாவது தடவையாக முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளதாக மன்னார் கல்வி வலயம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் தடவையாக இவ்வாறான விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தையும் 2023 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக முதலாம் இடத்தையும் . தற்பொழத 2024 ஆம் ஆண்டு முன்றாவது தடவையாக தொடர்ச்சியாக முதலாம் இடத்தையும் மன்னார் கல்வி வலயம் பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு வெற்றியீட்டிய வீரர்களை மன்னார் கல்வி வலயம் கௌரவிக்கும் முகமாக திங்கள் கிழமை (02) காலை இவர்களை மன்னார் நகரத்திலிருந்து மன்னார் கல்வி வலயம் வரை பேண்ட் வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வுக்கு மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் செல்வி ஜீ.டீ.தேவராஜா அவர்களும் மன்னார் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் பி.ஞானராஜ் . ஏ.பிரேம்தாஸ் அவர்களும் கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப் பணிப்பாளர் கல்வி நிர்வாக அதிகாரிகள் . நானாட்டான் மற்றும் மன்னார் கோட்டக் கல்வி அதிகாரிகளும் ஏனைய கல்வி திணைக்களத்தைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரியர் ஆலோசகர்கள் , நிர்வாக உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் , அசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)