தான் விடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை நிர்மாணித்து கொடுத்தோம். கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்த உடனே இந்த வீடமைப்பு திட்ட செயற்பாடுகளை நிறுத்தினார். எனவே தான் அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயல்படுத்துவதோடு, வீடில்லாதவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து வீட்டுப் பிரச்சினை உள்ளவர்களின் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி முஸ்லிம் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
கம் உதாவ வேலைத்திட்டத்தின் மூலமே பரந்தளவில் வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி அவர்கள் 10 இலட்சம் வீடுகளையும் 15 இலட்சம் வீட்டு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கின்ற போது அரசாங்கத்தின் வருமானம் உயர்ந்து காணப்பட்டது. அந்த காலத்தில் தேசிய உற்பத்தி 21% காணப்பட்டிருந்தது. தற்பொழுது அது பத்து வீதமாக குறைந்து இருக்கின்றது. எனவே இந்த வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் நிதியினூடாக மாத்திரம் முன்னெடுக்க முடியாது. எனவே புதிய வழிமுறைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இது இலகுவான காரியம் அல்ல. ஆனாலும் அந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நாட்டில் வீடமைப்பு வேலைத்திட்டத்தை தான் அதிகாரத்திற்கு வந்த உடனே ஆரம்பிப்பேன். உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு மீண்டும் ஒருமுறை கம் உதாவ யுகத்தை உருவாக்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.