உக்ரைன் போல்டோவாவில் பயிற்சி மையம் ஒன்றின் மீது ரஷ்யா 2 பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் காரணமாக 41 பேர் பலியாகியுள்ள நிலையில் 180 பேர் காயம் அடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.