கடும் மழை காரணமாக பார ஊர்தி ஒன்று தடம் புரண்டு நீர் ஓடையில்.
இச் சம்பவம் இன்று காலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டெவோன் பகுதியில் இடம் பெற்று உள்ளது.
தேயிலை கொழுந்து ஏற்றிச் செல்லும் பார ஊர்தி வீதியை விட்டு விலகி டெவோன் பகுதியில் உள்ள ஆற்றில் விழுந்து உள்ளது.
பார ஊர்தி சாரதி சிறு காயங்களுடன் கொட்டகலை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துல பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பிரதான வீதியில் அனைத்தும் வழுக்கள் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என தெரிய வருகிறது.
மஸ்கெலியா நிருபர்.