அரச ஊழியர்களின் சம்பளத்தை 107 வீதத்தினால் ஜனாதிபதி ரணில் உயர்த்தியுள்ளார்

  • ஜனாதிபதி ரணிலிடம் 20,000 ரூபா சம்பள உயர்வை அனுர கோரினாலும் அவரின் விஞ்ஞாபனத்தில் அதனைக் காணமுடியவில்லை?
  • ஜே.வி.பி.யின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது
  • சஜித் நகைச்சுவை பகிர்கிறார்
  • எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அனைத்து அரச ஊழியர்களும் ஜனாதிபதிக்கு தங்கள் பெறுமதியான வாக்குகளை அளிக்க வேண்டும்
  • ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய

20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி ஜே.வி.பி தொழிற்சங்கங்களை முன்னிறுத்தி அநுர குமார திஸாநாயக்க போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவரின் கொள்கைப் பிரகடனத்தில் அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஜே.வி.பியின் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரிவித்த சமன் ரத்னப்பிரிய, அநுர திஸாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதனைச் செய்வதற்கு வருடாந்தம் இரண்டு வரவு செலவுத் திட்டங்களை முன்வைக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இதனைக் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்கள் அனைவரினதும் சம்பள முரண்பாட்டை நீக்கி 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையில் 107% சம்பள உயர்வை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதோடு அதற்காக 350 பில்லியன் ரூபாவை வழங்க திறைசேரி செயலாளர் உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் செப்டெம்பர் 04, 05, 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பின் போது அனைத்து அரச ஊழியர்களும் எதிர்காலம் குறித்து சிந்தித்து சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வளவு பாரிய சம்பள உயர்வை வழங்கும் போது, ​​சில வேட்பாளர்கள் சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகளை முன்வைப்பதை நாம் பார்க்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச சேவையின் குறைந்தபட்ட சம்பளமாக 55,000 ரூபாவாக அதிகரிக்கத் தேவையான சட்டத்தை இயற்றியுள்ளார். தேவையான ஒதுக்கீடுகளை வழங்கி அது தொடர்பில் ஜனாதிபதியாக உறுதியாக குறிப்பிட்டு நிலையில் அந்தத் தொகையை விட 500 ரூபாய் அதிகமாக தருவதாக சஜித் அறிவித்துள்ளார். இவற்றை வேடிக்கையான விடயங்களாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இவ்வாறு செயற்படும் தலைவர்களுடன் ஒரு நாடு முன்னேற முடியுமா? பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுக்கு மதிய உணவு வழங்குவதாக ஜனாதிபதி கூறும்போது, ​​சஜித் பிரேமதாச அனைத்துப் பாடசாலைகளுக்கும் முழுமையாக மதிய உணவு வழங்குவதாகக் கூறுகிறார்.

கொழும்பு ரோயல், ஆனந்தா, நாலந்தா, டி.எஸ் போன்ற பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக மதிய உணவு வழங்க வேண்டுமா என்ற கேள்வி எமது நாட்டின் முன் உள்ளது. சஜித்துக்கு இது புரியவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விட தாம் ஒரு படி மேலே இருப்பதாகக் காட்டவே அவர் விரும்புகின்றார். இது உண்மையில் ஒரு நகைச்சுவை மாத்திரமே.

அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை ஒரு சதம் கூட அதிகரிப்பதாக அனுரகுமார தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா அதிகரிப்பு வழங்கிய போது ​​அனுர திஸாநாயக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அவர்கள் தமது தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தி 20,000 ரூபா சம்பள உயர்வு கோரினர். 20,000 ரூபா கோரி போராட்டம் நடத்தினால் அந்த 20,000 ரூபா சம்பள உயர்வைத் தருவதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஆனால் அப்படி குறிப்பிடப்படவில்லை. அதன்படி, ஜே.வி.பி.யின் வார்த்தைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையே கடுமையான வேறுபாடு உள்ளது என்பது புரிகின்றது.

தாம் தவறு இழைத்ததை உணர்ந்த அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்தி தருவதாக தற்போது கூறுகிறார்கள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால், ஒரு வருடத்தில் இரண்டு வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்ய வேண்டும். இவை வெறும் பொய்கள், வெற்றுப் பேச்சுகள்.

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் உட்பட சம்பள அதிகரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அரச ஊழியர்கள் தமது தபால் மூல வாக்குகளை அளிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின்படி அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் ரூ. 5450 இனால் அதிகரிக்கிறது. அடுத்து, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 7,200 இனால் அதிகரிக்கும்.

மொத்தமாக, 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல், குறைந்தபட்ச சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவருக்கு ரூ.12,650 மேலதிகத் தொகை வழங்கப்படும். இதன் படி மொத்தமாக ரூ. 55,000 சம்பளம் கிடைக்கும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பொருத்தமட்டில், அடிப்படை சம்பளம் 12,710 ஆக உயர்த்தப்படும். 7,200. ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக கிடைக்கும். இதன் மூலம் பாரிய சம்பள அதிகரிப்பு கிடைக்கும். தாதியர்களின் மொத்த சம்பளம் ரூ.60,000க்கு மேல் உயர்கிறது. ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் மொத்த சம்பளத்தில் ரூ.17,904 வினால் உயரும்.

மேலும், 2025 ஜனவரி 01 முதல் கிராம அதிகாரிகள் ,பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கணிசமான சம்பளம் உயர்வு கிடைக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னால் என்ன வழங்க முடியுமோ அதை வழங்காமல் மறுக்கும் தலைவர் அல்ல. எனவே தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றார்.

தேசிய ஊழியர் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திக புஷ்பகுமார மற்றும் அசேல பெர்ணாந்து ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

ஊடகப் பிரிவு
Ranil 2024 – இயலும் ஸ்ரீலங்கா
02-09-2024