தேசிய மூலோபாய திட்டத்தில் அரச சேவைக்கு தனித்துவம்!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான ‘தேசிய மூலோபாய செயற்றிட்டம் இன்று வெளியிடப்பட்டது.

அதில் அரச சேவையை முகாமைத்துவம் செய்வதற்கான  நடவடிக்கைகள் தொடர்பில் தனியிடம் வழங்கப்பட்டிருந்தது.

பொது நிர்வாகம் மற்றும் முகாமை – சிறந்த நிர்வாகம்

முதலில் தகுதி
அனைவருக்கும் இணை நிர்வாக அலகுகள்
ஒருங்கிணைந்த பொது சேவை தளங்கள்
புதுப்பிக்கப்பட்ட சம்பளம்
டிஜிட்டல் ஆதரவுடன் எல்லை நிர்ணயம்
தொழில் முனைவோர் அரசை ஆதரிப்பதற்காக ஒரு வலுவான நிர்வாக அமைப்பை உருவாக்கல்.

தேசிய மனித வள ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மட்டுமே பொது சேவை சம்பளத்தை நிர்ணயித்தல்.

அரசியல் தலையீடு இல்லாமல் தகுதி அடிப்படையிலான தேர்வு முறை மூலம் சிவில் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்.