‘மலையகத்தின் மாபெரும் தந்தை’ என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட கட்சி பிரமுகர்கள் இந்நிகழ்வில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.