டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில், அண்மையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கலாநிதி .கேரி கெல்ஸ்டோன் மற்றும் விசேட அதிதிகளாக திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார், விரிவுரையாளர் கலாநிதி.அஜய் பிரசாத் மற்றும் இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ டினேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.