ஜப்பான் கராத்தே தோ (JKF) சம்மேளனத்தின் உறுப்பினரும், தேசிய கராத்தே A தர கராத்தே நடுவரும், சோட்டோகான் கராத்தே அகாடமி இன்டர்நேஷனல் பணிப்பாளருமான சிஹான்.அன்ரோ டினேஷ் இனால் செயன்முறை விளக்கங்களுடனான பயிற்சி பட்டறை யாழ் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
சிரேஷ்ட கராத்தே ஆசிரியர் சிஹான்.என்.இரத்தினஜோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் கராத்தே நுட்பங்களில் உயிர்ப்பொறிமுறையின் (Biomechanics ) முக்கியத்துவத்தினை ஆசிரியர் அன்ரோ டினேஷ் தெளிவாக செயன்முறையுடன் விளக்கியிருந்தார். சுமார் 180மாணவர்களும், 20 பயிற்றுனர்களும் இதில் கலந்து கொண்டனர்.
பயிற்சி கட்டணம் எதுவுமின்றி நடாத்தப்பட்ட இந்நிகழ்வினை சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் வடமாகாண செயலாளர் சென்செய்.பி.சாந்தரூபன் மற்றும் உபசெயலாளர் சென்செய்.செல்வகுமார் ஆகியோர் முழு அனுசரணை வழங்கினர்.
இந்நிகழ்விற்கு வடமாகாண கராத்தே தோ சம்மேளன தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர் மற்றும் யாழ் மாவட்ட கராத்தே சங்க தலைவர், பொருளாளர், வடமாகாண கராத்தே நடுவர் இணைப்பாளர் உட்பட பிரதம பயிற்றுனர்கள் அதீதிகளாக கலந்திருந்தனர்.
இந்நிகழ்விற்கான வரவேற்பினை சிலம்பாட்டம் கலைமூலம் ஜெய் சிலம்பம் விளையாட்டு கழகத்தினர் சிறப்பாக வழங்கினர்.