இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது.
குசல் மெண்டிஸ் மற்றும் விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இடம்பிடிக்கவில்லை.
அவர்களுக்கு பதிலாக பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் லஹிரு குமார அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியில்,
திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஸ்ஸங்க, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் மிலன் ரத்நாயக்க.