சமூகத் தொடர்புக்கான தேசிய கத்தோலிக்க மையமும் கிறிஸ்தவ சமய விவகார திணைக்களமும் இணைந்து கொழும்பில் நடாத்திய விருதுகள் வழங்கிய நிகழ்வில் மன்னார் கலாபூஷணம் அந்தோனி மரியநாயகம் அல்மேடா கௌரவிக்கப்பட்டுள்ளார்.
‘நன்றாக செய்தீர்கள். நல்ல மற்றும் உண்மையான செய்பவர் நீங்கள். சிறிது நேரம் உண்மையாக இருக்கின்றீர்கள் நான் உன்னை அதிகம் பெறுவேன் உங்கள் எஜமானின் மகிழ்ச்சிக்கு நுழையுங்கள்’ என்ற சிந்தனைக்கு ஏற்ப சமூகத் தொடர்புக்கான தேசிய கத்தோலிக்க மையமும் கிறிஸ்தவ சமய விவகார திணைக்களமும் இணைந்து கொழும்பில் நடாத்திய அபிமானமிக்க ஓர் பயணத்தில் படைப்பாளர்களைத் தேடிச் செல்லும் தர்மபிரபாஷ்வர் கௌரவ விருதுகள் 2024 விழாவானது இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் அதிமேதகு ஹரோல்ட் அன்தோனி பெரேரா தலைமையில் கடந்த செவ்வாய் கிழமை (20) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையிலுள்ள மறைமாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் மன்னார் மறைமாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1956ல் பிறந்த மன்னார் சின்னப்பண்டிவிரிச்சானை பிறப்பிடமாகவும் மன்னார் சின்னக்கடையில் வசிக்கும் கலாபூஷணம் அந்தோனி மரியநாயகம் அல்மேடா ஆக்கத் திறன்மிக்க நாடகத் துறை விருதுக்குப் பாத்திரமாகியுள்ளார்.
இவர் பல மேடை நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். மேடை நாடகங்களில் பிரதான சிறப்புப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நாட்டுக்கூத்துக்களை நெறியாள்கை செய்ததுடன் அவற்றிலும் நடிப்புத் திறமையைக் காட்டியுள்ளார். அத்துடன் இவர் சிறந்த அறிவிப்பாளரும் ஆவார்.
தேசிய கலைஞர் . கலைச் செம்மல் . மன்.கலைச்சுரபி போன்ற சிறப்ப பெயர்களை கொண்ட விருதுகளைப் பெற்றுள்ளார். பிரக்சயா காப்பிட்டிற்கான ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார். மேடை அலங்காரத்தில் திறமையானவர்.
மன்னார் மறைசாட்சிகளை மையப்படுத்தி கொழும்பு உயர் மறைமாவட்ட சினிமா இயக்குநரால் எடுக்கப்பட்ட ‘வித்துக்கள்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மன்னார் திருமறைக் கலாமன்ற உறுப்பினர் . மன்னார் பனித செபஸ்தியார் பேராலய கலாமன்ற துணைத் தலைவராகவும்
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் உறுப்பினராகவும் கலையருவி கலைஞர் மன்றத் துணைத் தலைவராவும் திகழும் இவர் ஜனாதிபதி விருதையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)