கொட்டகலை நகரம் ஆரம்பிக்கும் பகுதியில் இருந்து பிரதான வீதியூடாக சீ.எல்.எஃப் செல்லும் வழியில் உள்ள வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் வெற்று போத்தல்களினால் அவ் வழியாக செல்லும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரிய அளவில் அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட கொட்டகலை பிரதேச சபை முன் வந்து உடன் கழிவுநீர் செல்லும் வடிகாலில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்றி வடிகாலை ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பயணிகள் குடியிருப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்.
மஸ்கெலியா நிருபர்.