சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஷிகர் தவான்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ஓட்டங்களை குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2,315 ஓட்டங்களை அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

38 வயதாகும் ஷிகர் தவான் 2010 ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் பங்களாதேஷிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்ட ஷிகர் தவான் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.