சூர்யாசொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பொலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். கங்குவா திரைப்படம் வருகிற ஒக்டோபர் மாதம் 10- ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
அவர் தயாரிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மெய்யழகன். இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் திகதி திரைக்கு வருகிறது.
இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படி பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடிரூபாய் (இலங்கை மதிப்பில் 432 கோடி ரூபாய்) இருக்குமாம். இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம். தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.