மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயொன்றின் மரணத்தக்குப் பின் வைத்தியசாலைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் செவ்வாய் கிழமை (20) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயொருவரின் மரணத்தினால் மக்கள் மத்தியில் எற்பட்டுள்ள அச்சம் சந்தேகங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடனும் எதிர்காலத்தில் மக்கள் அச்சமின்றி பொது வைத்தியசாலைக்கு வருவதற்கான சூழலை எற்படுத்தும் நோக்குடனும் அறிவுபூர்வமான முறையில் ஆராயும் நோக்குடனே இடம்பெற்றது.
இதில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் . மேலதிக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் , உதவி மாவட்ட செயலாளர் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , வைத்தியசாலை பணிப்பாளர் , வைத்திய நிபுணர்கள் , அருட்தந்தையர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் கருத்துக்கள் பரிமாறப்பட்ட பொழுது மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயின் மரணம் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கையில் மரணம் எற்பட்ட அடுத்த கனமே இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளருடன் ஓரிருவர் கலந்துரையாடியதாகவும்
பிழை ஒன்று எற்பட்டுள்ளது என்பது சந்தேகிக்கப்படுவதால் உடனடியாக இது தொடர்பாக விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவும் ,
குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வைதத்pயசாலை பணிப்பாளரினால் தொடர்பு கொண்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கேற்றவாறு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்மைக்கும் இங்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வைத்தியசாலையில் எதாவது தவறுகள் பிரச்சனைகள் ஏற்படுமாகில் நாம் முதலில் வைத்தியசாலை பணிப்பாளரை அனுகிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நாம் உண்மை தன்மைகளை தெரிந்து கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படும். எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் எமது வைத்தியசாலை மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. மன்னார் வைத்தியசாலைக்கு வந்த நாலு மாடி கட்டிடம் வவுனியாவில் கட்டப்பட்டது.
இங்கு வந்த சீரிசி ஸ்கேன் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு வந்த ‘ஜ’ மெசினை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்பொழுது இங்கு வந்த நாலு மாடி கட்டிடம் இரண்டு மாடியாக மாற்றம் அடைந்துள்ளது என இவ்வாறு பல குறைகளும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் இங்குள்ளவர்களால் குறிப்பாக வன்னி பாராளுமன்னற உறுப்பினர்களாலும் இவைகள் தொடர்பாக மௌனங்கள் காக்கப்படட்தாகவே தெரிகின்றது. என பொது அமைப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்டது. மற்றும் வைத்தியர்கள் தங்கள் பக்கங்களிலுள்ள குறைபாடுகள் நியாயங்களையும் இங்கு எடுத்தியம்பினர்.
அத்துடன் இன்றைய சூழலில் மக்கள் மத்தியில் வைத்தியசாலையை பொருத்தமட்டில் ஓர் அச்சநிலையும் அத்துடன் இங்கு கடமைபுரியும் ஒவ்வொரு வைத்தியர்களும் மிகவும் மன உலைச்சலிலேயே தங்கள் கடமைகளை செய்ய வேண்டிய நிலையும் உருவாகியுள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டது.
வைதத்pயசாலையில் அபிவிருத்தி குழு ஒன்று இயங்கி வருகின்ற நிலையில் மேலும் வைத்தியசாலை நலன்புரி சங்கம் ஒன்றையும் அமைத்து செயல்படுவது நலம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் இங்கு தெரிவிக்கையில் தான் மன்னார் பொது வைத்தியசாலை தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்ப இருப்தாகவும்,
அதில் குறிப்பாக ஆளணி பற்றாக்குறை , மன்னாருக்கு போதனா வைத்தியசாலை . உள் கட்டமைப்புகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற முக்கிய விடயங்களை தான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அன்மையில் நடைபெற்ற வேதனையான சம்பவத்துக்கு தான் வைத்தியசாலை சார்பாக யாவரிடமும் மன்னிப்பு கோருகின்றேன் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)