தமிழக வெற்றிக் கழகம் எதற்காக துவங்கப்பட்டது, கட்சியின் கொள்கை கோட்பாடுகள் என்னென்ன, கட்சிக் கொடியின் சிறப்புகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து விவரிக்கும் கொடிப்பாடலை விஜய் வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகத்திற்குப் பின்னர் தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது என தொடங்கும் பாடலையும் வெளியிட்டார் விஜய். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்களை இந்த பாடல் உள்ளடக்கி உள்ளது. போர்க் களத்தில் எதிரிப் படையை 2 யானைகள் சாய்த்து வாகை சூடுவது போன்ற காட்சியமைப்புடன் தொடங்கும் இந்த பாடல் 4.24 நிமிடங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. சிகரம் கிடைத்த பின்னும் இறங்கி வந்து சேவை செய்து நன்றி காட்டும் காலம் இது என்று விஜய் கட்சி தொடங்கியதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்கழக கொடியின் சிறப்புகளை விவரிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். தமன் இசையமைத்துள்ளார். போர்களத்தில் எதிரி படையை 2 யானைகள் சாய்த்து வாகை சூடுவது போன்ற காட்சியமைப்புகளுடன் தொடங்குகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப்பாடல். சிகரம் கிடைத்த பின்னும் இறங்கி வந்து சேவை செய்து நன்றி காட்டும் காலம் இது கட்சி தொடங்கியதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்கழக கொடியின் சிறப்புகளை விவரிக்கும் வகையிலும் கொடி பாடலின் வரிகள் அமைந்துள்ளன. ஒரு கறை படியாத கையை பிடித்து போகப்போகிறோம், அரசர கேள்வி கேட்கும் தளபதியின் காலமிது என ஆங்காங்கே அரசியல் கருத்துகளும் புகுத்தப்பட்டுள்ளன. வார்த்தைக்கு வார்த்தை தமிழ், தமிழன் நிரம்பிய இந்த பாடல், விஜய் ரசிகர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் நரம்புகளை புடைக்க வைக்கும் என்பது நிச்சயம்.