பணத்துக்காகவும் வரப்பிரசாதங்களுக்காகவும் சோரம் போகின்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்னிடம் இல்லை..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நான் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின் போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அந்த அழைப்பை தான் நிராகரித்ததாகவும், அந்தப் பிரதமர் பதவிக்கான மக்கள் வரம் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் சந்தர்ப்பவாத பெருச்சாளித்தன அரசியலை மேம்படுத்தி பதவிகளின் பின்னால் செல்வதற்கு தமக்கு விருப்பமில்லை. அந்தக் கொள்கையினால் தான் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை பொறுப்பேற்க்குமாறு கூறிய போதும் அதனை தான் நிராகரித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்த நாட்டை சூறையாடி வளங்களையும் பணத்தையும் திருடிய திருடர்களின் பாதுகாவலராக தான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். திருடர்களை பாதுகாக்கின்ற வாயில் காவலாளியாகவும் இருந்திருப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும் பணத்துக்காகவும் சோரம் போவதற்கு தயார் இல்லை. எந்த ஒரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன் வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயல்படபோவதில்லை. சஜித் பிரேமதாச ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(19) மாலை மீரிகம நகரில் மிகவும் வெற்றிகரமான முறையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.

முழு நாடும் மலை போல் இருக்கும் கடனுக்குள் சிக்கி இருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் சுருங்கி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள 220 இலட்சம் மக்களை அந்தத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களை வளப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.

நாடொன்றை நிர்வாகம் செய்வது என்பது நாட்டுக்கு சேவை செய்வதாகும்.

நாடொன்றை நிர்வாகம் செய்வது என்பது இந்த நாட்டுக்கு சேவை செய்வதாகும். அது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும். பாதாளத்தில் விழுந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மூலோபாய தரவு மைய அறிவியல் பொருளாதார முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் ஊடாக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களின் பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்க்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இலாபமற்ற வேலை திட்டத்தினால் தான் நாடு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

நாடு இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். பிரதிபலன் இல்லாத செயற்திட்டத்தை செயல்படுத்தியமையால் நாடு கடன் சுமைக்குள் இறுகிக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டாகும் போது பில்லியன் கணக்கில் கடன் செலுத்த வேண்டும் என்று அறிந்திருந்த போதும் 2019 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனே செல்வந்தர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் 600 – 700 பில்லியன் ரூபாக்களை வரிச்சலுகையாக வழங்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை 12 வீதத்திலிருந்து 8% விதமாக குறைத்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்ட போது அன்றைய காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 22 வீதமாக காணப்பட்டது. அன்று மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமாக இருந்த போதும், இன்று உள்நாட்டு உற்பத்தி 10 தொடக்கம் 11% ஆக குறைந்து காணப்படுகின்றது. முறையான விதத்தில் பொருளாதாரத்தை கையாளுகின்ற போது அதன் வாழ்வியல் பாகங்களுக்கு உயிரூட்டி ஏற்றுமதி பொருளாதாரத்துறையை மேம்படுத்த, நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் முதலீடுகளுக்கு தேவையான சூழல் அவசியம்.

எமது நாட்டில் ஊழல், மோசடி, திருட்டு, இருட்டடிப்பு என்பன ஒழிக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவு பொருளாதார சூழல் காணப்படுமாயின் தான் முதலீட்டாளர்கள் நமது நாட்டுக்கு வருவார்கள். வேறு நாடுகளுக்குச் செல்கின்ற முதலீட்டாளர்களை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையான சிறந்த பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும். இதன் ஊடாக இளைஞர் யுதிகளுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். முதலீட்டாளர்கள் எமது நாட்டுக்கு வருவதற்கு சாதகமான பொருளாதார சூழலை மையப்படுத்தி நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்கின்ற பொருளாதார சூழலை உருவாக்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஊழல் மோசடி திருட்டு என்பனவற்றின் காரணமாக நமது நாட்டிற்கான வளங்கள் இல்லாமல் போய் இருக்கின்றது. நாட்டுக்காக அந்த வளங்களை மீண்டும் பெற்றுக் கொண்டு அதற்குக் காரணமானவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, அந்தப் பணங்களைப் பெற்று, அதனை மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக செயல்படுத்துவோம்.

எமது நாட்டில் பொதுமக்களுக்கான சட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. சட்டம் பணக்காரர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் ஒருவிதமாக செயல்படுவதோடு, சாதாரண பொது மக்களுக்கு இன்னுமொருவிதமாக செயல்படுவதும் உண்டு. சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதைகளில் தேவையான விதத்தில் பயணிக்க கூடிய பாதுகாப்பான தேசம் ஒன்றையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவேன் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி.

போதைப்பொருள் பாடசாலை கட்டமைப்பை ஆதிக்கத்திற்குட்படுத்தி உள்ளது. அரசாங்கத்திற்கு புள்ளிகளைப் பெற்றுக் கொள்கின்ற கண்காட்சிக்குரிய வேலை திட்டத்திலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. நாட்டின் பிரபல்யமானவர்களுடன் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்கள். போதைப் பொருட்களை இல்லாது ஒழிப்பதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.