‘சீதாராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி, அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இயான்வி அவர் ஜோடியாக நடிக்கிறார்.இயான்வி சமூக வலைதளலங்களில் தனது அபாரமான நடனத்தாலும் அழகாலும் பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலே பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸுடன் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உட்பட பலர் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப்படம், வரலாற்றுப் பின்னணியை கொண்டது. பிரபாஸ் போர்வீரனாக நடிக்கிறார். “உலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறந்து போன உண்மைகளுக்கும் ஒரே பதில் போர் என நம்பிய சமூகத்தின் நிழலில் இருந்து எழுந்த வீரனின் கதை இது” என்கிறது படக்குழு.