கல்விக்கு கரம் கொடுப்போம் World Action Foundation அணுசரணையில் அதன் தலைவர் திரு சுபாஷ் சுந்தர்ராஜ் வேண்டுகோளுக்கினங்க இன்று முதலாவது நிகழ்வாக ஹப்புகஸ்த்தன த. வி தரம் ஐந்து இந்த வருடம் புலமைபரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு,ஒரு நாள் கருத்தரங்கு, வினாத்தாள்கள் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வை சிறந்த முறையில் நடத்துவதற்கு உதவிய தலைவர் திரு.சுபாஷ் சுந்தர்ராஜ் அவர்களுக்கும் தொடர்புபடுத்தி கொடுத்த திரு,தயான் அவர்களுக்கும், நிகழ்வை ஏற்பாடு செய்து கொடுத்த அதிபர் திரு. ஜோதிவேல், மஸ்கெலியா ஒருங்கிணைப்பாளர் திரு ராஜ் அசோக் அவர்களுக்கும், பிரவுன்லோ ஆலய நிர்வாகசபை தலைவர் திரு. அசோக் அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும்
கல்வி சமூகம் நன்றிகளையும் , பாராட்டுகளையும் தெரிவிக்கின்றது.
பாடசாலை, பெற்றோர், ஆசிரியர் சங்கம், தொடர்ந்து இவ்வாறான செயல் அமர்வு பயிற்சி பட்டறை ஏற்பாடுகள் செய்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
மஸ்கெலியா நிருபர்.