மலையாள சினிமாவில் பிரபல சூப்பர்ஸ்டாராக கொடிகட்டிப் பறப்பவர் மோகன்லால். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் மோகன்லால், கடும் காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள் மற்றும் தசை வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது மருத்துவமனை நிர்வாகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதன்படி, மோகன்லாலுக்கு வைரஸ் சுவாச தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதனால் 5 நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டும். நெரிசலான இடங்களைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.