பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்க தீர்மானித்துள்ளார்.
இதன் பிரகாரம், இன்று மாத்தறை அகுரெஸ்ஸ நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் மூன்றாவது பேரணியில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.