நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, ஸ்னேகா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.