நுவரெலியாவில் பட்டத்திருவிழா..!

நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் பட்டத்திருவிழா இன்று (17)சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இவ் வருடம் பட்டத்திருவிழா நிகழ்வு ஒழுங்குசெய்பட்டது.. குறித்த நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பட்டங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்