தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் பம்பலபிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இந்து மதகுருமார்களை சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி மதகுருமார்களுடன் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கலந்துகொண்டார்.