நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.
IndSri Ferry Services என்ற தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் ‘சிவகங்கை’,படகு சேவை நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே சுமார் 50 பயணிகளுடன் சுமார் 4 மணி நேரத்தில் தனது முதல் பயணத்தை முடித்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துறைமுகத்தில் பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் இணைப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியாக இந்த சேவை கருதப்படுகிறது .