கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை இன்று (15) ஆரம்பமானது.
விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள் இடையில் நிற்காமல் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக செல்லும்.
இந்த புதிய பஸ் சேவையானது, விமான நிலையம், ஏவியேஷன் கம்பெனி லிமிடெட், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் ஒரு தனியார் பஸ் நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்துகின்றன.
இந்த பஸ் சேவைக்காக 10 சொகுசு பெரிய பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு பயணியிடம் இருந்து 3,000 ரூபாய் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.