செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற ஐனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோரும் சமுகமளித்தனர்.
வேட்பு மனுவை தாக்கல்செய்த பின்னர் தேர்தல்கள் செயலகத்திற்கு வெளியில் வந்த அநுர குமார திசாநாயக்கவை வருகை தந்திருந்தவர்கள் அமோகமாக வரவேற்றனர்.