மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலக நலம்புரிச் சங்கத்தால் அரசாங்க அதிபரின் பிறந்த தினம் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புதன் கிழமை (14) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு செல்வகுமார் தலைமையில் இப்பிறந்த தின நிகழ்வு இடம்பெற்றது.
அத்துடன் இந் நிகழ்வில் விவசாயிகளுக்கான காப்புறுதி சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் அரச அதிபரின் பொன் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலக வளாகத்துக்குள் மோட்டார் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டதுடன் ஞாபகர்த்தமாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவர் மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக கடமையேற்று சொற்பக் காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் அடிக்கடி பல கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு நிலவும் குறைகளை மக்களிடம் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)