சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகம் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் இரு நாட்டுக்குமான நட்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிங்கப்பூர் முதலீட்டாளர்களை கிழக்கு மற்றும் மலையத்தில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமானுக்கு அமைச்சர் சண்முகம் சிங்கப்பூர் அரசு சார்பாக அழைப்பு விடுத்தார்.