அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக அண்மையில் இராஜினாமா செய்த விஜயதாஸ ராஜபக்ஷ வகித்த நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே தற்போது வகிக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக இந்த அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.