கேரளாவின் வயநாட்டில் பெய்த தொடர்மழையால் சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சிரிமட்டம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த மலைக்கிராமங்கள் முற்றிலும் மண்ணில் புதைந்த நிலையில், பலி எண்ணிக்கை 400-ஐக் கடந்தது. 3 கிராமங்களும் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில், நிலச்சரிவில் சுமார் 400 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. பல நாட்கள் தேடுதல் பணி நீடித்த நிலையில், மறுசீரமைப்பு முயற்சியில் அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்களும் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தனுஷ் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.