எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் நேற்று (12) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்டட அக்கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.