ஒக்டோபர் வரை நாள் ஒன்றுக்கு 1000 கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வௌியிடப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஒக்டோபர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு மாதத்திற்கான கடவுச்சீட்டை அவசியமானால் மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன். இல்லையெனில், ஒக்டோபரில் புதிய கடவுச்சீட்டு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.