15 வயதிற்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் Asian Grammer மற்றும் கொழும்பு இந்துக்கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக்கல்லூரி அணி 6 விக்கட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
பின்னர் துடுப்பெடுத்தாடிய Asian Grammar அணி 33 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.பின்னர் follow on முறையில் இரண்டாவது இனிங்சை தொடங்கிய Asian Grammar அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது.
இதன் மூலம் கொழும்பு இந்துக்கல்லூரி அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஜஸ்வதன் 79 ஓட்டங்களையும், சர்வீஸ் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.அபினேஷ் முதல் இனிங்ஸில் 5 விக்கட்டுக்களையும் இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கட்டுகள் அடங்கலாக மொத்தமாக நேற்றைய போட்டியில் 10 விக்கட்டுக்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இதன் மூலம் இந்து கல்லூரி அணி , தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
கொழும்பு இந்து கல்லூரி அணிக்கு வைப்ஸ் நியூஸின் வாழ்த்துக்கள்.