நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை தரம் ஐந்து மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு பாடசாலையில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கருத்தரங்கில் இலவச வினாத்தாள்கள் வழங்கப்பட்டு பரீட்சையில் எதிர்பார்க்கும் வினாக்கள் அடங்கிய முதலாம், இரண்டாம் பகுதி பரீட்சை நடத்தப்பட்டு அது தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
குறித்த கருத்தரங்கில் பதுளை பகுதி வளவாளரும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தயார்படுத்தல் ஆசிரியருமான திரு.சுரேஸ்குமார் அவர்கள் கலந்து கொண்டார் கருத்தரங்கு இறுதியில் மாணவர்களின் கல்வி கற்கும் முறை மீட்டல் பயிற்சிகள் மற்றும் கற்றலுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் விரிவுரை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து இவ் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நலன் கிடைக்கும் ஏராளமான திட்டங்களை அமுலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது மேலும் எதிர்காலத்தில் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர் .
வி.தீபன்ராஜ்