பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அதிரடியாக தற்போது அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
தக் லைஃப், கல்கி 2, இந்தியன் 3 என வரிசையாக கமல்ஹாசன் கைவசம் படங்கள் இருப்பதால், சினிமா ஷூட்டிங்கிற்காக தன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பங்கேற்க முடியவில்லை என்றும் பிக் பாஸ் ரசிகர்களுக்கும், போட்டியாளர்களுக்கு விஜய் டிவிக்கும் நன்றி என அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.